கட்டுநாயக்கவில் கோடாவுடன் சிக்கிய குடும்பஸ்தர்

82 0

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாது கங்கை ரம்ய தொடுபொல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 61 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஆவார்.