முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் நாற்ப்பத்து ஏழாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமக்கான தீர்வின்றி போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் மக்கள் தொடர்ந்தும் j
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு மாதர் சங்கத்தினர் இன்று போராட்ட இடத்துக்கு வருகைதந்து தமது ஆதரவை வழங்கி மக்களுடன் இன்றையதினம் போராட்டத்திலீடுபட்டனர்
தொடர்ச்சியாக இந்த மக்களை இவ்வாறு தவிக்க விடாது அனைத்து அமைப்புக்களும் முன்வந்து இம்மக்களுக்கு ஆதரவு வழங்கி இம்மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

