ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது சிறுமி உயிரிழப்பு

120 0

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேகட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் பின்புறத்தில் உள்ள ஓடையில் தவறி வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ, வேகட பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

உயிரிழந்த சிறுமி முன்பள்ளிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் சிறுமியின் பாட்டி, சிறுமியைக் குளிப்பாட்டுவதற்காக நீரை ஆயத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, இந்த சிறுமி வீட்டின் பின்புறத்திற்குச் சென்றுள்ள நிலையில் ஓடையில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.