பொதுத்தேர்தல் ; தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு

135 0

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தபால்மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.