பல ஆண்டுகளுக்குப் பின்னர் அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு!

16 0

கொழும்பு அலரி மாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் இருந்து ரொடுண்டா சுற்றுவட்டம் வரை  செல்லும் வீதி வெள்ளிக்கிழமை (04) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக குறித்த வீதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வீதி திறக்கப்பட்டமையினால் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பொதுமக்களுக்கு இலகுவாக பயணிக்க வழிவகுக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.