இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் – இரண்டு விமானதளங்களை இலக்குவைத்தது ஈரான் – சிஎன்என்

64 0
image

இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் தலைமையகத்தின் மீது அல்லது அதற்கு அருகில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதையும் நெவட்டிம் விமானப்படைதளம்,டெல் நொவ் விமானப்படை தளம் ஆகியவையும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதையும் வீடியோக்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இந்த இலக்குகளை ஈரான் தாக்கலாம் என அமெரிக்க இஸ்ரேல்  புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே  எதிர்பார்த்திருந்தனர்,ஈரான் தனது மூன்று விமானப்படை தளங்களை தாக்கலாம் என இஸ்ரேலிற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன,என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்எனிற்கு தெரிவித்துள்ளன.

விமானப்படை தளங்கள் கட்டளை பீடங்களை ஈரான் இலக்குவைக்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இஸ்ரேலிற்கு  தெரிவித்தனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தலைநகரின் கிலிலொட் பகுதியில் உள்ள மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் இரண்டு ஏவுகணைகள் விழுந்து வெடிப்பதைவீடியோக்கள் காண்பித்துள்ளன.இது ஒரு குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நெகெவ் பாலைவனத்தில் உள்ள நெவட்டிம் தளத்தில் ஈரானின் பல ரொக்கட்கள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இஸ்ரேலின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் உள்ள டெல்நொவ் தளம் தாக்கப்பட்டுள்ளதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.