யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் புதிதாக மதுபானசாலைகள்

131 0

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் புதிதாக மதுபானசாலைகள்  திறக்கப்பட்டுள்ளமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மத்தியகுழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை சுட்டிக்காட்டியுள்ள அவர் பரந்தன் சந்தி முதல் இரணைமடு சந்திவரை மதுபானநிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

இந்த பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள் மதுபானநிலையங்கள் பரவுவது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியின் சில அரசியல்வாதிகளின் ஆதரவை பெறுவதற்காக முன்னைய அரசாங்கம் மதுபானநிலையங்களிற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இதில் தலையிட்டு  தேவையற்ற மதுபான நிலையங்களை மூடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.