ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 107 வாகனங்களை பயன்படுத்தியது யார் ?

176 0

சமீபத்தில் மீள கையளிக்கப்பட்ட ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார் என்ற விபரங்களை ஜனாதிபதி அலுவலகம் அம்பலப்படுத்தியுள்ளது.

 

அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி செயலகம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளது.

 

முன்னைய ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை பயன்படுத்தி தான் நியமனம் செய்த அதிகாரிகளிற்கு 107 வாகனங்களையும் வழங்கியிருந்தார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மீள கையளிக்கப்பட்ட வாகனங்களை காட்சிப்படுத்துவது தங்களின் நோக்கமல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி அலுவலகம்,  குறிப்பிட்ட வாகனங்களை அத்தியாவசிய சேவைகளிற்கு வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், வாகனங்களை பயன்படுத்தியவர்களின் பட்டியலையும் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.