இலங்கை அதிபராகும் அனுர குமார திசநாயக யார்?

104 0

இலங்கை அதிபர் தேர்தல்இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுனா (JVP) – (NPP) கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன்படி ஜெவிபி தலைவர் அனுர குமார திசாநாயக [55 வயது] இலங்கை அதிபராகிறார்.

இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் ப்ரேமதாசாவை 42 சதவீத வாக்குகளைப் பெற்று திசாநாயக வெற்றி பெற்றுள்ளார்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெறும் 16 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். ஜேவிபிஇலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புட்டேகம [Thambuttegama] கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிறந்தார் அனுர குமார திசாநாயக. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்தவர் ஆவார்.

களனி பல்கலைக்கழகத்தில் [university of Kelaniya] அறிவியலில் பட்டம் பெற்ற திசாநாயக படித்துவந்த சமயத்திலேயே ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கை கடைப்பிடித்த அப்போதைய அரசுக்கு எதிராக 1987 -89 காலகட்டத்தில் எழுச்சி பெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சி இயக்கமான மார்க்சிய லெனினிய இடதுசாரி ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.

அரசியல் 1995 ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் மாணவர்கள் அசோசியசனுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திசநாயக அதன்பின்னர் ஜேவிபி அமைப்பின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1998 இல் ஜேவிபி அமைப்பின் அரசியல் முடிவுகளை எடுக்கும் பொலிட்டிகள் பீரோ குழுவில் சேர்க்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திசநாயக பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போதைய அதிபர் குமாரதுங்கா ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த ஜேவிபி அமைப்பினர் 2002 ஆம் ஆண்டு அவருடைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி பேச்சுவரத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதரவை விளக்கிக்கொண்டனர்.

CHEASEFIRE – LTTEதொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் UPFA கட்சியுடன் கூட்டு வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான சீஸ் ஃபயர்[ceasefire] ஒப்பந்தத்தை எதிரித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க அதிபரானார். கூட்டணியில் இருந்த ஜேவிபி யை சேர்ந்த அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

தொடர்ந்து அரசியலில் தீவிரத்துடன் இயங்கி வந்த அவர் கடந்த 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற அனுர குமார திசநாயக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை சிதைந்ததால் மக்கள் போராட்டம் வெடித்தது.

தொடர்ந்து அதன்பின் நடக்கும் தற்போதைய தேர்தலில் அனுர குமார வென்றுள்ளார்.பொருளாதார நிலையின்மை இலங்கை அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த திசநாயக முந்தைய அரசுகள் பொருளாதாரத்தைக் காப்பாற்றத் தவறியதை சுட்டிக்காட்டி தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி மக்களிடம் ஆதரவு கேட்டார்.

ஜேவிபியின் தேர்தல் அறிக்கையில் இலங்கையின் கல்வி, பொது சேவைகள் மற்றும் மக்கள் வாசிப்பதற்கான குடியிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதானமாக முன்னிறுத்தி வாக்குறுதிகள் அமைந்திருந்தது. வரும் -காலம் இந்தியாவுக்கு கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் நிலையாக உள்ள ஜேவிபி இடதுசாரி அமைப்பாக இருந்தாலும் தமிழர்கள் பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் பக்கம் சார்ந்து ஒரு தலை பட்சமாகவே செயல்பட்டு வருவது ஆகும். எனவே வரும் காலங்களிலும் அனுர திசநாயகவின் முடிவுகளில் அது பிரதிபலிக்கும் என்றே எதிரிபார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்க்கது.