இலங்கை பிரதமர் சீனா செல்லவுள்ளார்

216 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த விஜயம் இடம்பெறுவுள்ளது.

அவர் பெய்ஜிங்கில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வார்.

இந்த மாநாடு மே மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்துக்கு முன்னதாக எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையில் இந்தியாவுக்கான விஜயத்தை அவர் மேற்கொள்கிறார்.