நான் ஜனாதிபதியானால் செல்வந்தர்கள் அதிக வரி செலுத்தும் நிலையை உருவாக்குவேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நான் ஜனாதிபதியானால் செல்வந்தர்கள் அதிக செலுத்தும் நிலையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்பாட்டினை மாற்றியமைப்பேன் சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர்,தனது வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அசோசியேட்டட் பிரசிற்கு வழங்கிய பேட்டியில் சஜித்பிரேமதாச பொதுமக்கள் எதிர்கொள்ளும் வரிச்சுமையை குறைப்பதற்காக தனது கட்சி ஏற்கனவே சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்திற்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கையில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ள அவர் ஆனால் மக்கள் மீதான சுமையை குறைப்பதற்காக இதனை மனிதாபிமான முறையில் முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது மேலும் சுமைகளை சுமத்தவேண்டியிருந்தால் அந்த சுமைகளின் பெரும்பகுதியை மிகப்பெரும் செல்வந்தர்களும் செல்வந்தர்களும் சுமக்கவேண்டும்,இலங்கையின் உழைக்கு ஆண்கள் பெண்கள் அல்ல என சஜித்பிரேமதாச சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்தங்கள் கடன்மறுசீரமைப்பினை முன்னெடுத்துவருகின்றது,இதனடிப்படையில் அரசாங்க வருமானத்தினை அதிகரிப்பதற்காக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2022 இல் இலங்கை வெளிநாட்டுக்கடன்களை திருப்பி செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து கொள்வனவு நிறுத்தப்பட்டது புதிய நாணயத்தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது.
எனினும் செல்வந்தர்கள் அதிகாரிகளுடன் தொடர்புடையவர்கள் வரி செலுத்துவதில்லை என்றும்,இந்த சுமையை மத்திய வர்க்கத்தினரும் ஏழைகளும் வரிகள் மூலம் சுமக்கும் நிலை காணப்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய பொருளாதார விடயங்களில் அவர்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனினும் அதன் பலாபலன்; சாதாரண மக்களை சென்றடையவில்லை.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுகிறது
சர்வதேச ஊடகத்திற்கான இந்த பேட்டியில் தற்போதைய ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைகளை விமர்சித்துள்ள சஜித்பிரேமதாச ரணில்விக்கிரமசிங்க சுருக்கம் மூலம் தீர்வை காணமுயல்கின்றார் என தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியை அடிப்படையாக கொண்ட,அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தின் மூலம் பிரச்சினையிலிருந்து வெளியில் வருவதே தனது கொள்கை என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

