கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்கள் தமது காணி உரிமை கோரி ஆரம்பித்த போராட்டம் நேற்றுடன் முப்பதாவது நாளை எட்டியது.
தமக்கான காணி உரிமம் வழங்கப்பட்டு அதன் பின்னர் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைத்தே கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
30 நாட்களாக தொடர்கின்ற தங்களது போராட்டத்திற்கு ஊடகங்கள் மாத்திரமெ பக்கபலமாக இருப்பதாகவும், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வருகை தந்து பார்வையிட்டு செல்வதாகவும் பன்னங்கண்டி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

