இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்கள் பெண்கள் – விளையாட்டு வீராங்கனை புஷ்பமாலி ராமநாயக்க

121 0
நான் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளமையையிட்டு பெருமிதமடைகிறேன். இவ்வளவு பிரமாண்டமான ஒரு மேடையில் ஏறி எமது நாடு வீழ்ந்துள்ள படுகுழியிலிருந்து மீட்டெடுப்பதற்காக ஒரு சில வார்த்தைகளையேனும் கூற கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

எமது நாடு 76 வருடங்களாக சாபக்கேட்டுக்கு இலக்காகியிருக்கிறது. இந்த ஊழல்மிக்க அரசியல்வாதிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய காலம் இப்பொழுது பிறந்திருக்கிறது. அதற்காக கைகோர்த்து செயற்படுவதற்காகவே நாங்கள் இங்கு குழுமியிருக்கிறோம்.  அதற்காக நாங்கள் அநுர குமார திசாநாயக்கவை தோ்ந்தெடுத்திருக்கிறோம்.

இவ்வளவு காலமும் எமது நாட்டுக்கு மன்னர்களே தலைவர்களாக வந்தார்கள். இப்பொழுது முதல் தடவையாக மண்ணில் கால் பதித்த மக்களின் இதயத்துடிப்பினை உணர்ந்த மண்ணின் மைந்தனொருவர் தலைவராகப் போகிறார். செப்டெம்பர் 21 ஆம் திகதி அதற்காக நாங்கள் எங்களை அர்ப்பணிப்போம்.

அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இலங்கையில் வாக்காளர்களில் அதிகமான எண்ணிக்கை கொண்டவர்கள் பெண்களே. குடும்பத்திலும் தீர்மானமெடுக்கின்ற செயற்பாட்டில் பெண்களே அதிக பங்களிப்பினை கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாக்குகள் மூலமாக மாத்திரம் தேசிய மக்கள் சக்திக்கு பெரு வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை மனதிற்கொள்ளுங்கள்.

இலங்கையின் வரலாற்றின் புதிய பக்கத்தை எழுதக்கூடிய பெறுமதிமிக்கவர்களாக உங்களால் மாற முடியும். நாங்கள் வெற்றியை நெருங்கிவிட்டோம். அதனை பெருவெற்றியாக மாற்றுகின்ற பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கின்றது. அதற்காக உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன்.