வெவ்வேறு பிரதேசங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் இருவர் கைது!

90 0

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதிபாகம பிரதேசத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (24) கருவலகஸ்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கருவலகஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த  இரகசியத் தகவலின் அடிப்படையில்  மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் 43 வயதுடைய புத்தளம் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கருவலகஸ்வெவ பொலிஸார் ஈடுபட்டு  வருகின்றனர்.

இதேவேளை, சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர்  சனிக்கிழமை  (24) சூரியபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிரிவின் ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் ஈச்சிலம்பற்று பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.