எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதை அனுமதிப்பதற்கான பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனத்தில் சற்று முன்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்று வருகிற ஐக்கிய தேசிய கட்சி விசேட சம்மேளனக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.
இதன்போதே தேர்தலில் போட்டியிடுவதை அனுமதிப்பதற்கான பிரேரணை கட்சியின் விசேட சம்மேளனத்தில் நிறைவேற்றப்பட்டது.

