யாழ். பெண்ணிடம் 22 இலட்சம் ரூபாய் பண மோசடி – ஒருவர் கைது

95 0

பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபர் மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏறாவூர் பகுதியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.