முன்னாள் அமைச்சர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

124 0

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க இன்று (24) தனது 76ஆவது வயதில் காலமானார்.

இவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராகவும் ருக்மன் சேனாநாயக்க இருந்துள்ளார்.