புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி ; ஒருவர் காயம்

111 0

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (23) காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.