பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்தார் முன்னாள் எம்.பி. சந்திரகுமார்

110 0

பிரதமர் தினேஸ்குனவர்த்தனவை  சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சந்திரகுமார்  கொழும்பில் நேற்று (22) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது இனங்களுக்கிடையில் நம்பிக்கையையும் பரஸ்பர தன்மையையும் சம உரிமையையும் கொண்ட அரசியல் தீர்வின் அவசியம் பற்றியும் சமகால நிலவரங்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கலந்துரையாடப்பட்டன என சமத்துவக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தமிழ் மக்களின் அரசியல், அன்றாட பிரச்சினைகள், முக்கியமாக நிலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் என்பன அடங்கிய மகஜரும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.