தனமல்வில மாணவி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்

94 0
மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரைக் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 18 பேரும் இன்று வியாழக்கிழமை  (22) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி வெல்லவாய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்திற்குச் செய்தி சேகரிப்பதற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவரை இனந்தெரியாத நபரொருவர் தாக்க முயன்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், அந்நபர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்நபரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.