மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலகொய்ஆர பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (21) கற்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கற்குவாரியில் பணியாற்றும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரது சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

