விடுவிக்கப்பட்ட 20 இலங்கையர்களும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
20 இலங்கையர்களையும் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,மேலும் 28 இலங்கையர்கள் மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் உள்ள சட்டவிரோத சைபர் மையங்களில் 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

