வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களிற்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது

111 0
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என தெரிவித்துள்ள ஐக்கிய சோசலிச கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிறிதுங்கஜெயசூரிய இந்த விடயத்தில் கட்சி ஒருபோதும் ஏனைய கட்சிகளை போல தடுமாறியதில்லை என தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது சிறுபான்மை இனத்தவர்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக கருவியாக 13 வது திருத்தம் பயன்படுத்தப்படுகின்றது.

பார்வையாளர்களின் மனவிருப்பத்திற்கு ஏற்ப அரசியல்வாதிகள் அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவருகின்றனர்.

எனினும் ஐக்கிய சோசலிச கட்சியை சேர்ந்த நாங்கள்  நிலையான உறுதியான கொள்கையை கொண்டுள்ளோம்.

வடக்குகிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினருக்கு சுயநிர்ணய உரிமைக்கான உரிமையுள்ளது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

எங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு நாட்டின் சில பகுதிகளில் ஆதரவில்லாமல் இருக்கலாம்,ஆனால் இது நியாயமானது நீதியானது என நாங்கள் கருதுகின்றோம்.

தற்போதைய 13 வதுதிருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து வடக்குகிழக்கு மக்கள் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என நாங்கள் கருதவில்லை.

அவர்களின் கரிசனைகளிற்கு தீர்வை காணும் நீண்டகாலதீர்வே அவர்களிற்கு அவசியம்.

தமிழ்மக்களிற்கு சுயநிர்ணய உரிமையை வழங்குவது  நாட்டை பிளவுபடுத்தும்  என நாங்கள் கருதவில்லை.மாறாக அது மேலும் ஐக்கியப்பட்ட  நாட்டை உருவாக்கும் என நாங்கள் கருதுகின்றோம்.

ஸ்கொட்லாந்து போன்ற நாடுகளில் இதுவே வரலாறு.

இந்த விடயத்தில் ஏனைய கட்சிகளை போல ஐக்கிய சோசலிச கட்சி  தடுமாறவில்லை.

உதாரணத்திற்கு ஜேவிபி ஒரு காலத்தில் 13 வது திருத்தத்தை கடுமையாக எதிர்த்தது அதற்கு  எதிராக வன்முறைகளை கூட பயன்படுத்தியது.

ஆனால் அவர்கள் தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டனர்.தாங்கள் முன்னர் எதிர்த்த கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என தற்போது  தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையான தன்மையின்மை  அரசியல்கட்சிகளின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகின்றது.