எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 02 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.
மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வேனின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் குறித்த வேனானது வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது, வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் ஓர்டோகந்த பகுதியைச் சேர்ந்த 02 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது வேனில் சிறுவர்கள் உட்பட 12 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

