முச்சக்கர வண்டி – வேன் மோதி விபத்து ; இருவர் படுகாயம்

121 0
முச்சக்கர வண்டியுடன் வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளானதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தானது வவுனியா, நவகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த வேன் ஒன்று, வவுனியாவில் இருந்து அநுராதபுரத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.