வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ” கோத்தா அசங்க”வுக்கு சொந்தமான துப்பாக்கிகளை தனது வீட்டில் வைத்து இரகசியமாக விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை தலைமையகத்தின் கண்காணிப்பாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் கடவத்தை மற்றும் பேலியகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான 373 கிலோ கிராம் போதைப்பொருள் , 12 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

