கனவு முடிந்தது… மேக்ரான் இனி நிஜத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

112 0

பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகளை நல்லபடியாக நடத்திமுடித்துவிட்டது. பெருமைக்குரிய விடயம்தான். ஆனால், மீண்டும் பிரான்ஸ் ஜனாதிபதி நிதர்சனங்களை எதிர்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பல ஆண்டுகளாக எதிர்பார்த்துவந்த ஒலிம்பிக் போட்டிகளை ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நடத்தி முடித்து உலக அரங்கில் நல்ல பெயர் வாங்கிவிட்டார்.

கனவு முடிந்தது... மேக்ரான் இனி நிஜத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் | France S Beautiful Dream Fades As Paris Games

 

ஆனால், ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் முன் அவர் பாதியில் விட்டுவந்த ஒரு வேலை இன்னும் பாக்கி இருக்கிறதே.

ஆம், பிரான்ஸ் அரசு அரசாங்கமும், நாடாளுமன்றமும், பிரதமரும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கிறது.

ஆக, பிரான்சுக்காக பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பணியை, விட்ட இடத்திலிருந்து இனி தொடரவேண்டும்.

கனவு முடிந்தது... மேக்ரான் இனி நிஜத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் | France S Beautiful Dream Fades As Paris Games

பெரும்பான்மை பெற்ற கட்சி பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவேண்டும், அவரை மேக்ரான் அங்கீகரிக்கவேண்டும், புதிய பிரதமர் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயார் செய்யவேண்டும் என பல வேலைகள் இருக்கிறது!