ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை திங்கட்கிழமை (12) பிற்பகல் சந்தித்த விஜித் விஜயமுனி த சொய்சா, ஜனாதிபதிக்கு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
அரசியல் செய்வதற்கு நாடொன்று இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் காரணமாகவே இன்று நாடு முன்னோக்கிச் செல்வதாகவும், அந்த வேலைத்திட்டத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமது கட்சி உறுப்பினர்களின் ஆசியுடன் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்னாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக கட்டான ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி த சொய்சா இணைந்து கொண்டார்.