உயிரிழந்தவர்கள் கெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், காயமடைந்த மூவரில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் வறக்காப்பொல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளார்.

