நித்திரையில் இருந்த பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை – சம்மாந்துறையில் சம்பவம்

107 0

முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   வீட்டில் அதிகாலை வேளை 3 மணியளவில் நித்திரையில் இருந்த பெண் தாக்கி விட்டு முகமூடி அணிந்த நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (11)  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய  சம்மாந்துறை பொலிஸார்  விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது, கல்முனை பிரதேச  நகைக்கடை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (12)  திருடப்பட்ட நகை  மீட்கப்பட்டுள்ளதுடன்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரும் சம்மாந்துறை பிரதேசத்தில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.