பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகார பேச்சுவார்த்தை தேர்தல் சட்ட மீறலாகும்

121 0

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தல் சட்ட மீறலாகும்  என   ட்ரான்பெரன்ஷி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை (12) இடம் பெறுகின்றது.

இன்றைய தினம் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக சம்பள நிர்ணய சபையில் அங்கத்துவம் வகிக்கும்  தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து  பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தேர்தல் சட்ட மீறலாகும்  என  ட்ரான்பெரன்ஷி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா தெரிவித்துள்ளது.