இதன் காரணமாக தமது பிள்ளைகளும் மன உளைச்சல்களுக்கு உட்பட்டுள்ளனர் என பெற்றோர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது, பிரதேச மட்ட குழு நடனப் போட்டிகள் (திறந்த) 22/06/2024 சனிக்கிழமையன்று குயில்வத்தை த.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
இதில் மூன்று பாடசாலைகளைச்சேர்ந்த மாணவர்கள் குழு நடனப்போட்டிகளில் பங்கு பற்றியுள்ளனர். தமிழ்த் தின போட்டி சுற்று நிரூபத்தின் (9.2) பிரிவின் படி குழு நடனத்துக்கு ஐந்து நடுவர்கள் நியமிக்கப்படல் வேண்டும் என்ற நியதி காணப்பட்டாலும் அன்றைய போட்டிகளில் ஒரே ஒரு நடுவர் மாத்திரம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இது குறித்து பொறுப்பானவர்களிடம் கேட்கப்பட்டாலும் சரியான பதில்கள் அளிக்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. மதியம் 2 மணிக்கு போட்டிகள் முடிவடைந்தாலும் மாலை ஐந்து மணி வரை முடிவுகள் காட்சிப்படுத்தப்படவில்லை.
பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இப்போட்டியில் இரண்டாம் இடம் அறிவிக்கப்பட்ட பாடசாலையின் நடன ஆசிரியை நடுவரின் தீர்ப்பில் திருப்தியில்லையென்றும் சுற்றுநிரூபத்தின் படி இப்போட்டிகள் இடம்பெறவில்லையென்றும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒன்றும் செய்ய முடியாது என பதில் கூறப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படாத நிலையில் பிரதி அதிபர்களும் வருகை தந்திருக்கவில்லை.
பின்னர் பாடசாலையின் புதிய அதிபர் 27 ஆம் திகதி கடமையில் இணைந்து கொண்டிருந்த நிலையில் இது குறித்து வலயக்கல்வி பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த பாடசாலையை வலய மட்ட போட்டிகளில் அனுமதிப்பதற்கு அவர் அனுமதித்தாலும் பின்னர் அதற்கு எதிர்ப்புகள் தோன்றவே அதை கைவிட வேண்டியதாயிற்று.
எனினும் பிரதேச மட்ட போட்டிகளிலேயே தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறும் குறித்த பாடசாலை சமூகத்தினர், சுற்று நிரூபத்தின் படி ஐந்து நடுவர்களுடன் மீண்டும் பிரதேச மட்ட குழு நடனப் போட்டிகள் நடத்தப்படல் வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிடின் இதை ஒரு மனித உரிமை மீறலாக கருத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

