கிளிநொச்சி – இரணைமடு குளத்து நீர் வீண் விரயம்

133 0

கிளிநொச்சி – இரணைமடு குளத்து நீர் அளவுக்கு அதிகமாக திறந்து விடப்பட்டு வீண் விரயமாவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி பாரிய நீர்ப்பாசன குளமான இரணை மடுகுளத்தில் இருந்து சிறுபோகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது.

எனினும், அளவுக்கு அதிகமாக நீர் திறந்து விடப்பட்டிருப்பதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள நீர் பாசன கால்வாய்கள் சில நிரம்பி வழிந்து பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத தரிசு நிலங்களிலும் நீர் தேங்கி காணப்படுகின்றன.

 

எனவே இதற்கான உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.