மன்னர் சார்லசுக்கு விருந்து கொடுப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்த செலவு

109 0

பிரித்தானிய மன்னர் சார்லஸ் மூன்று நாட்கள் அரசுமுறைப்பயணமாக பிரான்சுக்கு சென்றிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், மன்னர் சார்லசின் வருகையின்போது, அவருக்கு அளித்த விருந்துக்காக பெரும் தொகை ஒன்று செலவிட்டப்பட்டதாக பிரான்சின் ஆடிட்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாயைப் பிளக்க வைத்த தொகை

மன்னர் சார்லஸ் பிரான்சுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்தபோது, அவருக்கு பிரம்மாண்ட விருந்தொன்றை அளித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

அந்த விருந்தில் லாப்ஸ்டர், நண்டுவகைகள், ஒரு சிறப்பு வகை கோழிக்கறி, காளான் உணவுகள் மற்றும் பலவகை சீஸ்கள் முக்கிய உணவாக பரிமாறப்பட்டன.

இனிப்புகள் வரிசையில், ரோஜா இதழ் கிரீம், ராஸ்பெர்ரி மற்றும் லிச்சி பழங்கள் ஆகியவை கலந்த rose macaroon cookieயும் இடம்பெற்றிருந்தது.

ஆக, உணவுக்காக 165,000 யூரோக்கள், பானங்களுக்காக 40,000 யூரோக்கள் என, மொத்தம் விருந்துக்காக செலவிடப்பட்ட தொகை, 450,000 யூரோக்கள்.

செலவுக் கணக்கை விவரித்த பிரான்ஸ் ஆடிட்டர் அலுவலகம், ஜனாதிபதி மேக்ரான் இப்படி விருந்தினர்களுக்காக எக்கச்சக்கமாக செலவு செய்தால், அது பட்ஜெட்டில் இடிக்கும் என எச்சரிக்கவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.