அரச வேலை கோரிப்போராடும் பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டு – வடக்கு ஆளுநர்

235 0
வடக்கில் போராடும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டுஅதற்கு அடுத்த படியாக மத்திய அரசிற்கு உண்டு என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார்.
ஆளுநர் செயலகத்தில்  இடம்பெற ற புதுவருடத்தை முன்னிட்ட நிகழ்வின்போது வட மாகாண திணைக்கள அதிகாரிகள் , அரசியல்வாதிகள் , இந்தியத் துடைத்தூதுவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்நிறைவில் வட மாகாணத்தைச் சேர்ந்த 500 சிறார்களிற்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் நிறைவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவை தொடர்பில் ஆளுநர் மேலும் தகவல் தெரிவிக்கையில் ,
அரச வேலை கோரிப்போராடும் பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டு அதற்கு அடுத்த படியாக மத்திய அரசிற்கும் உண்டு இருப்பினும் குறித்த பட்டதாரிகள் விடயம் என்னிடம் தற்போது 2 மாதமாகவே பட்டதாரிகள் விடயம் எனது கவனத்திற்கும் வந்தது. அப்போது எத்தனை பட்டதாரிகள் இருக்கின்றனர் என்ற விபரங்கள் தெரியாது இருந்தனர்.
குறித்த விபரங்களைப் பெறுவதற்காக இரு வார காலம் சந்தர்ப்பம் கோரியிருந்தனர். தற்போது இதன் விபரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வேலைவாய்பினை வழங்க நான் அமைச்சர் கிடையாது இருப்பினும்  அதன் பிரகாரம் வேலைகோரும் பட்டதாரிகளிற்கு வேலை வழங்க திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கையும் கோரப்பட்டுள்ளது. அதற்காக முயற்சிக்கப்படுகின்றது.
இதேநேரம் வட மாகாணத்தில் உள்ள 1300 தொண்டராசிரியர்களின் விடயம்திற்கு விரைவில் தீர்வு கிட்டவுள்ளது. அதேபோன்று முன்னர் புலிகள் அமைப்பில் இருந்த 35 பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்புத் தொடர்பிலும் தனி அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனால் அவர்களிற்கும் வேலை வாய்ப்புக் கிட்டும். என்றார்.