இந்த சம்பவம் நேற்று (01) வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மாவனெல்லை பிரதேசத்தில் வசிக்கும் மூன்றரை வயதுடைய முன்பள்ளி மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவின, நேற்று (1) காலை 10.45 மணியளவில் தனது இரண்டு நண்பர்கள் மற்றும் முன்பள்ளி பாடசாலையின் காவலாளியுடன் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை மூடுவதற்காக பாடசாலையின் முற்றத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர், உயிரிழந்த மாணவி தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து மீண்டும் முன்பள்ளி பாடசாலை கட்டிடத்திற்குள் செல்ல முயன்ற போது தோட்டத்திலிருந்த தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று இவரது தலையில் வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

