பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராகொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா ஆகிய பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மற்றும் விதுலிபுர பகுதியில் வசிக்கும் 45 மற்றும் 43 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 33 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம், 4,860 லீற்றர் கோடா , 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 3 எரிவாயு அடுப்புகள் ஆகிய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

