சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது !

128 0

துபாயிலிருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் 24,000 மான்செஸ்டர் ரக சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலைய  சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (28) மாலை துபாயிலிருந்து இலங்கை வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்  என்பதுடன்  இவர் கொண்டு வந்த சிகரெட்டுகளின் பெறுமதி 4,097,253  ரூபாவென தெரியவந்துள்ளது .

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சிகரெட் கையிருப்பு சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.