அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு ; சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜர்

88 0
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 7 சந்தேக நபர்களும் இன்று (22) திங்கட்கிழமை கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துருகிரிய பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் “கிளப் வசந்த” என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன் பிரபல பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எழுவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று (22) கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.