அசங்க அபேகுணசேகர பிணையில் விடுவிப்பு!

90 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இதற்கமைய, குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையின் பிரகாரம், அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.