ஜனாதிபதி எம்முடன் இணைந்து பயணித்தால் ஆதரவு வழங்க தயார் – மஹிந்த ராஜபக்ஷ

93 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை. எம்முடன் தொடர்ந்து இணைந்து பயணிக்க அவர் தயார் என்றால் ஆதரவு வழங்குவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கேள்வி, பதில் வருமாறு,
கேள்வி – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில் – ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.மிகுதி   நடவடிக்கைகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி –வெற்றிப் பெறுவதற்கான திட்டங்கள் என்ன ?
பதில் – வெற்றிப் பெறும் சிறந்த திட்டங்கள் எம்மிடம் உள்ளது. நாங்களே வெற்றிப் பெறுவோம்
கேள்வி -யார் வேட்பாளர்
பதில் -அதனை உரிய நேரத்தில் குறிப்பிடுவோம் தற்போது குறிப்பிட முடியாது.எந்தளவுக்கு பலமான வேட்பாளரை நாங்கள் களமிறக்குகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள்.அப்போது தெரியும்.
கேள்வி – பொதுஜன பெரமுனவின் வேட்பாளரா
பதில் – பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தான்,பொதுஜன பெரமுன ,பெரமுனவுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கும்.
கேள்வி -அடுத்த அரசாங்கம் பொதுஜன பெரமுனவுடையதா அல்லது பொது வேட்பாளருடையதா ?
பதில் -எமது அரசாங்கம்
கேள்வி – பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வீர்களா ?
பதில் – உரிய நேரத்தில் அவர்கள் வருவார்கள்
கேள்வி – ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளீர்களா ?
பதில் -இதுவரையில் இல்லை,எம்முடன் இணைந்து பயணிக்க அவர் தயார் என்றால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்.
கேள்வி -நிபந்தனைகள் ஏதும் உள்ளதா?
பதில் – நிபந்தனைகளை உங்களிடம் குறிப்பிட முடியாது