ஆறுபேரினது தேநீர்கோப்பைகளில்சயனைட் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோசமான முதலீடு தொடர்பான தகராறுகாரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐந்துநட்சத்திர ஹோட்டலிற்கு சென்றவேளை பொலிஸார் மூன்று ஆண்களினதும் மூன்று பெண்களினதும் சடலங்களை கண்டுள்ளனர்.
மேசையில் இன்னமும் பயன்படுத்தப்படாத உணவுகள் பிளாஸ்டிக் துண்டொன்றினால் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டனபயன்படுத்தப்பட்ட தேநீர்கோப்பைகளில் வெள்ளை நிற பவுடர்போன்ற பொருள் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததுபின்கதவு திறந்த நிலையில் காணப்பட்டது எனபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரை தேடுவதாக தெரிவித்திருந்த பொலிஸார் தற்போது அந்த கோணத்தில் விசாரணையை கைவிட்டுள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் ஒருவரே தேநீர் கோப்பையில் விசத்தை கலந்திருக்கலாம் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் அமெரிக்க பிரஜைகள் ஏனைய நால்வரும் வியாட்நாமை சேர்ந்தவர்கள்.
ஹோட்டல் அறையில் மீட்கப்பட்ட தேநீர்கோப்பைகளிலும் உயிரிழந்தஒருவரின் உடலிலும் இரசாயனபதார்த்தங்கள் காணப்படுகின்றனஇதேநீர் குடுவைக்குள் ஆறுபேரினதும் தேநீர் கோப்பைக்குள் சயனைட் காணப்பட்டது என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

