கல்கமுவவில் வாகன விபத்து ; இளைஞர் பலி!

110 0

கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கமுவ  ஆணமடுவ வீதியின் பலுகந்தேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆணமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கிச் சென்ற கார், எதிர்திசையிலிருந்து  வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்  சென்றவர்  கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

மேலும், காரின் சாரதியான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.