அநுராதபுரம், மிஹிந்தலை வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 11 மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை வைத்தியசாலையில் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மாணவர்கள் சிலர் ஒவ்வாமை காரணமாக திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.
இதனையடுத்து சுகயீனமுற்ற மாணவர்கள் அனைவரும் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

