தெதுறு ஓயாவில் மூழ்கி இளைஞன் ஒருவர் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன், வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு பேருடன் இணைந்து தெதுறு ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது இந்த இளைஞரும் மற்றுமொரு நண்பரும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

