தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை என்பது போட்டி கட்சிகள் பரப்பும் கதை

181 0

தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களின் ஆதரவு இல்லை என்பது போட்டி அரசியல் கட்சிகளால் பரப்பப்படும் மற்றுமொரு கதை என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க ஆனால் நாங்கள் அரசியல் மாற்றமொன்றை அவதானித்துள்ளோம் , குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர் மத்தியில் இந்த மாற்றம் அதிகளவில் தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

தெற்கிலும் கிழக்கிலும் தேசியமக்கள் சக்தி குறித்து முஸ்லீம்கள் பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்திவருகின்றனர் என மேலும் தெரிவித்துள்ள அனுரகுமாரதிசநாயக்க  அவர்களை நோக்கி செல்வதில் நாங்கள் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கிற்கு எங்கள் செய்தியை மேலும் உரத்தவிதத்தில் தெரிவிக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என சண்டேடைம்ஸிற்கு தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் அரசியல்சாந்தப்படுத்தல் முறையை போல இல்லாமல் நாங்கள் எங்கள் அரசியல் நோக்கை தீவிரமாகவும் ஆர்வத்துடனும் தெரிவிப்பதற்கு முன்னுரிமையளிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து சமூகங்களினதும் ஆதரவை பெறுவதற்கு தொடரும் இந்த முயற்சிகள் மிக அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இருவர் அல்லது மூவருக்கு இடையிலான போட்டியா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பல தனிநபர்களும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தெரிவித்துள்ள அவர் ஒரு முகாம் கட்சிகளின் நிறங்களிற்கு அப்பால் ஊழலையும் குடும்ப அரசியலையும்,உயர்பதவிகளிற்கு குடும்ப உறுப்பினர்களும் சகாக்களும் நியமிக்கப்படுவதையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது என தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினர் தங்கள் நன்மைக்காக மக்களின் பணத்தை  சூறையாடியவர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்கள்,இவர்கள் ஊழல் வர்த்தகர்கள் மற்றும் மற்றும் இந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்படும் சட்டத்தை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தும் உயர் அதிகாரிகளின் உதவியுடன் இதனை முன்னெடுத்தவர்கள்எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊழல் மிகுந்த அரசியல் கட்டமைப்பு சட்டத்திற்கு மேலானதாக தன்னை  ஸ்தாபித்துக்கொண்டுள்ளது,உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை என குறிப்பிட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க இது அப்பாவி மக்களை துன்புறுத்துவது மற்றும் அவர்களின் அமைதியான வாழ்க்கையை பறிப்பதால் சமூகத்திற்கு  குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுகின்ற இன்னுமொரு முகாம் உள்ளது அது தேசிய மக்கள் சக்தி இது ஊழல் குடும்ப ஆட்சி என்பவற்றை கடுமையாக எதிர்க்கின்றது,பொருளாதாரத்தை நேர்மையான மாற்றத்தை நோக்கி கொண்டு செல்ல விரும்புகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.