பல்லேகமவில் லொறி கவிழ்ந்து விபத்து ; ஒருவர் காயம்

117 0
மாத்தளை, லக்கல, பல்லேகம பிரதேசத்தில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து பிபில நோக்கிப் பயணித்த லொறி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது லொறியின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் பல்லேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.