அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ வீதியில் அஸ்வயாபெத்தீவெவ மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (29) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த லொறி ஒன்றின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் லொறியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியில் பயணித்த மூன்று பேர் படு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


