நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் இன்று வெளியிட்டப்பட்டுள்ள புள்ளி விபரத்திNலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில் மூன்று மாவட்டங்கள் டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்;ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள.
கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களே டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களாக பதிவாகியுள்ளன.
மேல்மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேல்மாகாணத்தினுள் உள்ளடங்கும் கொழும்பு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 155 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 720 பேரும் இதேவேளை இதுவரையான காலப்பகுதியில் 9 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.

