உனவட்டுன கடலில் மூழ்கி மலேசியப் பிரஜை உயிரிழப்பு

110 0

காலி பிரதேசத்தில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருந்த மலேசியப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (25) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய மலேசியப் பிரஜையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் உனவட்டுன கடலில் நீராடிக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ள நிலையில் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.